பந்துதலையில் தாக்கி மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்!
Saturday, February 25th, 2017
இங்கிலந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ்டய்ட் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்துதலையில் பலமாக தாக்கியதால் மைதானத்தில் சரிந்து விழுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிராட் போர்ட் பிரீமியர் லீக் போட்டி நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் பங்கேற்ற லைட்கிளிப் கிரிக்கெட் கிளப் வீரர் அலெக்ஸ் டய்ட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அலெக்ஸின் இரு கண்களுக்கு இடையே பந்து மிகபலமாக தாக்கியது. இதனால் நிலைகுழைந்து விழுந்த அலெக்ஸை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அலெக்ஸை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் தலையில் 15 எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதோடு, அவரின் கண்கள், காது ஆகிய உறுப்புகளுக்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டைட்டின் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்படபலர் நன்கொடையளித்து வருகின்றனர்.

Related posts:
|
|
|


