பதவி விலகியமைக்கு மெத்தியூஸ் கூறிய காரணம்!

Thursday, July 13th, 2017

தொடர் தேல்விகள் காரணமாகவும், அடுத்த உலக கிண்ண போட்டிக்காக உரிய காலத்தை வழங்கி அணியை உருவாக்க அணியின் தலைவருக்கு தேவையான காலத்தை வழங்கவும் தான் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அஞ்சலோ மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனது பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி டெஸ்ட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில். ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்காக உபுல் தரங்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: