பங்களாதேஷ் அணி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது!
Monday, February 20th, 2017பங்களாதேஷின் அணி தனது நூறாவது டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளது இந்த 100ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
100ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியுடன் பங்கேற்க பங்களாதேஷ் அணி விருப்பம் தெரிவித்ததையடுத்து மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் அணி டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி-20 தொடரில் பங்கேற்பதற்காக மார்ச் மாதம் முற்பகுதியில் இலங்கை வரவுள்ளது.
Related posts:
ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப் போன பரிதாபம்!
தங்க காலணி யாருக்கு?
விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்!
|
|