பங்களாதேஷ் அணி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது!

பங்களாதேஷின் அணி தனது நூறாவது டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளது இந்த 100ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
100ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியுடன் பங்கேற்க பங்களாதேஷ் அணி விருப்பம் தெரிவித்ததையடுத்து மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் அணி டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி-20 தொடரில் பங்கேற்பதற்காக மார்ச் மாதம் முற்பகுதியில் இலங்கை வரவுள்ளது.
Related posts:
இனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்- அபினவ் பிந்த்ரா!
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு கிரிக்கட் போட்டி!
உலகக்கிண்ணம் – இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியா மோதல்!
|
|