பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம்!
Wednesday, March 20th, 2024
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த போதிலும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் முடிவை அவர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வனிந்து ஹசரங்கவின் இடைநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதியை மீறியதாக வனிந்து ஹசரங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியின் 37 ஆவது ஓவரில் நடுவர் ஒருவரிடமிருந்து வனிந்து ஹசரங்க தமது தொப்பியை பறித்து, நடுவரை கேலி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இது சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டுவது போன்றதான செயலை ஒத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவர்களுடன் கைகுலுக்கும் போது அவர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்ட குற்றச்சாட்டில் இலங்கை அணியின் தலைவர் குசல் மென்டிஸிற்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


