நுவான் பிரதீப் விலகல்!
Friday, July 7th, 2017
இலங்கை அணியின் பந்துவீச்சாளரான நுவான் பிரதீப், உபாதைக்கு உள்ளாகியதன் காரணமாக அடுத்த ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் இருந்து விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவான் பிரதீபிற்கு பதிலாக நுவான் குலசேகர மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியின் பட்டியலில் இணைக்கப்படவுள்ளதாக அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
நுவான் பிரதீப்பிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு அடுத்த இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பிருந்தாலும், எதிர்வரும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் இந்திய அணியுடனான போட்டிகளிலும் அவரை கலந்துகொள்ள வைக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெற்றியில் திருப்தியி கொள்ளாத போல்டுக்கு!
அரச நிறுவனமாகிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
அடுத்த மலிங்கா பெரியசுவாமி?
|
|
|


