அரச நிறுவனமாகிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

Saturday, June 2nd, 2018

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அரச நிறுவனமாக்கும் சட்டமூலமொன்றை மிகவிரைவில் கொண்டுவரவுள்ளதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஆடுகள பராமரிப்பாளர்கள் ஆட்ட நிர்ணயச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இது பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:

கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் முறைகேடுகளுக்குப் பாரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தனியார் நிறுவனம் போன்றே கருதப்படுகின்றது. அதில் விளையாடும் வீரர்கள் அரச உத்தியோகத்தர்களாக கருதப்படுவதும் இல்லை.

இதனால் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் பண முறைகேடுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை செய்ய முடியாதுள்ளது. இதனாலேயே இந்தத் திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளது என்றார்.

Related posts: