நீண்ட இடைவெளியின் பின்னர்  சொந்த மண்ணில் வெற்றியை ருசித்த பாகிஸ்தான்!

Monday, October 30th, 2017

இலங்கைக்கு எதிரான மூன்றாவது 20க்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், முக்கிய நாடுகள் எதுவும் பாகிஸ்தான் மண்ணில் விளையாட மறுத்து வந்தன.

இந்தநிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை அணி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் விளையாட இணங்கியது. இதற்கமைய பல ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் இடம்பெற்ற முக்கிய போட்டியாக இன்றைய 20க்கு இருபது போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இதன்படி, இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்ததடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. எனவே, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 180 ஓட்டங்களைக் குவித்தது.

இதற்கமைய 181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களை எதிர்கொண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு இராஜ்ஜிய மைதானத்தில் இடம்பெற்ற இரண்டு 20க்கு இருபது போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை, மூன்று போட்டிகளைக் கொண்ட 20க்கு இருபது தொடரை 3-0 என இழந்துள்ளது.

Related posts: