அவுஸ்திரேலியாவில் அரங்கேறிய மனதை நெகிழவைக்கும் சம்பவம்!

Tuesday, December 12th, 2017

மகளிர் பிக்பேஷ் லீக் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது.  சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் மனதை உருக்கும் சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடியது. சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் எலிஸ் பெரி 41 பந்துகளில் 91 ஓட்டங்களையும், எஸ்லை கார்ட்னர் 52 பந்துகளில் 114 ஓட்டங்களையும் குவிக்க, அணி 242 ஓட்டங்களை குவித்தது.

 இந்த போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எலிஸ் பெரி, கடைசி ஓவரின் 3 பந்தில் ஆறு ஓட்டமொன்றை விளாசினார். இந்த பந்து நேரடியாக போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை தாக்கியது. பந்து தாக்கியதால் சிறுவனுக்கு இதனை பார்த்த எலிஸ் பெரி போட்டியை நிறுத்திவிட்டு, உடனடியாக மைதானத்தைவிட்டு வெளியேறினார். குறித்த சிறுவன் இருக்கும் திசைக்கு ஓடிவந்து அவருக்கு உதவிசெய்ய முற்பட்டார். உடனடியாக மைதான அணி வைத்தியரை அழைத்து சிறுவனுக்கு சிகிச்சையளிக்குமாறு கூறினார். பின்னர் சிறுவனை வைத்தியசாலைக்கும் அனுப்பிவைத்தார்.

போட்டி நடக்கும் போது மைதானத்திலிருந்து வெளியில் வந்து சிறுவனுக்கு உதவி செய்த எலிஸ் பெரியின் செயல் குறித்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்ற அதே வேளை மிகப்பெரிய வீராங்கனையாயினும் சிறுவனுக்கு உதவிடும் பொருட்டு மைதானம் விட்டு விலகியமை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Related posts: