நியூசிலாந்து அணியின் அனைத்து கிரிக்கட் போட்டிக்கும் வில்லியம்சன் தலைவர்
Sunday, May 1st, 2016
நியூசிலாந்து கிரிக்கட் அணியில் அனைத்து போட்டிகளுக்கும் தலைவராக கேன் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வில்லியம்சன் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நியூசிலாந்து அணியின் சிறந்த கிரிக்கட் வீரராகவுள்ளார்.
இந்தியாவில் இடம் பெற்ற கடந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டியில் கேன் வில்லியம்சனின் தலைமைத்துவம் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்குள்ளானது.
இதன் காரணமாகவே அவர் டெஸ்ட் போட்டியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். நியூசிலாந்து அணியின் டெஸ்ட் போட்டியில் 134 வது தலைவராக வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் பிரண்டன் மெக்கலம் ஓய்வு பெற்றதனை அடுத்து வில்லியம்சன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
மகளிர் உலக கிண்ண கிரிக்கட் போட்டி ஆரம்பம்.
முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு!
மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை விளையாடுவார் - நம்பிக்கை தமக்குள்ளதாக மைக்கேல் ஹஸ்ஸ...
|
|
|


