இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி!

Friday, June 16th, 2017

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் பர்ஹிம்ஹாமில் இன்று இடம்பெற்றது.போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட பங்களாதேஸ் அணிக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.பங்களாதேஸ் அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக தமின் இக்பால் 70 ஓட்டங்களையும் , முஸ்பிகுர் ரஹீம் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.அணித்தலைவர் முஷரபே மொர்டாசா ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.பந்து வீச்சில் , பிரவீன் குமார் , ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஜாதவ் ஆகியோர் இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கட்டை வீழ்த்தியிருந்தார்.பதிலுக்கு 265 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 40.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களையும் , அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.சிகர் தவான் 46 ஓட்டங்களை பெற்றார்.அதன்படி, எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா அணி மோதவுள்ளது

Related posts: