நான் தலைவன் இல்லை – ரபாடா!

ஒருநாள் போட்டிகளில் விளையாடும் தென்னாபிரிக்கப் பந்து வீச்சாளர்கள் குழாமின் தலைவர் என என்னை நான் கருதத் தொடங்கவில்லை என ரபாடா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நேற்று விளையாடியதன் மூலம் தனது 50 ஆவது ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டி தரவரிசைப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ரபாடாவே தென்னாபிரிக்காவின் ஒருநாள் பந்து வீச்சுக் குழாமின் தலைவராக விளங்குகின்றார். எனினும் நான் அவ்வாறு எண்ணவில்லை. பந்து வீச்சை ஆரம்பிப்பவன் என்ற அடிப்படையில் எனக்குப் பொறுப்புள்ளது அவ்வளவுதான் என ரபாடா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களில் எனக்கும் சம்சிக்குமே அனுபவம் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அந்த வகையில் பார்த்தால் நாங்களே பந்து வீச்சுக் குழாமிற்கு தலைமை தாங்குகின்றோம். ஆனால் நான் அவ்வாறு எண்ணுவதில்லை. ஆனால் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் நான் முழுமையாக முன்னிற்பேன் எனவும் ரபாடா குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|