நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் -ஷகிப் நெகிழ்ச்சி
Friday, September 1st, 2017
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த வெற்றியை வங்கதேச வீரர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.இதே ஆக்ரோசம் 2-வது டெஸ்ட் போட்டியில் தொடரும் என்றும், அப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றுவோம் என வங்கதேச அணியின் தலைவர் ரஹீம் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஷகிப் அல் ஹசன் கூறுகையில், நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன், அப்போது தனது மனைவி ஷகிப், நீங்கள் நாளை வங்கதேசத்தை வெற்றி பெறச் செய்வீர்கள் என்று கூறினார். என் மீது நம்பிக்கை வைத்த என் மனைவிக்கு நன்றி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Related posts:
T-20 உலகக்கிண்ண சாம்பியன் அணிக்கு 24 கோடி பரிசுத் தொகை
தெண்டுல்கர்-காம்ப்ளி மீண்டும் இணைவு!
மத்தியை வீழ்த்தி யாழ். இந்துக் கல்லூரி வெற்றி!
|
|
|


