மீண்டும் இலங்கை அணி படுதோல்வி!

Friday, October 20th, 2017

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜாவில் இடம்பெறும் இந்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில், இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.நிரோஷன் திக்வெல்ல 22 ஒட்டங்களையும் , சுரங்க லக்மால் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மற்றைய அனைத்து வீரர்களும் 20 ஓட்டங்களையும் விட குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் ஹசான் அலி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ஹிமாட் வசீம் , சதாப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.பதிலுக்கு 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

Related posts: