தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
Thursday, January 18th, 2018
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரின் இரண்டாம் போட்டி நிறைவடைந்தது.போட்டியில் இந்திய அணி 135 ஓட்டங்களால் தோல்வி கண்டது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ஓட்டங்களையும் இந்திய அணி 307 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் 258 ஓட்டங்களைப் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணிக்கு 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
எனினும் இந்திய அணி 151 ஓட்டங்களுக்கு சகல விட்டுக்களையும் இழந்து போட்டியிலும் தொடரிலும் தோல்வி கண்டது.இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 24ம் திகதி ஜொஹானஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது
Related posts:
சாமுவேல்சுக்கு அபராதம்
தாயாரின் அஸ்தியுடன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற மகள்!
இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்தும் உபுல் தரங்க!
|
|
|


