தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மேற்கிந்திய தீவுகள்!

Friday, July 22nd, 2016

டி20 போட்டிகளில் உலக சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணிலே டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்க முடியாமல் தவித்து வருகிறது.

சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரை வென்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அந்த அணி விளையாடிய 9 தொடரில் 8 டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. ஒரு தொடர் சமநிலையானது.

கடைசியாக 2013ல் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு டெஸ்ட் வெற்றி என்பது அந்த அணிக்கு எட்டாக்கனியாக உள்ளது.இந்த நிலையில் இந்தியாவுடனான 4 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் இன்று நடக்கிறது.

இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி மோசமான நிலையிலே உள்ளது. இந்தியாவுடன் கடைசியாக அந்த அணி விளையாடிய 5 தொடரிலும் (2-0, 1-1, 1-0, 2-0, 2-0) தோல்வியைத் தழுவி உள்ளது.இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அதேசமயம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் ’ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க முடியும், முன்னதாக 2006ல் டிராவிட் தலைமையிலும், 2011ல் டோனி தலைமையிலும் இந்தியா தொடரை கைப்பற்றியது

Related posts: