தேசிய கால்பந்தாட்டத்தில் ஹென்றிஸ் சம்பியனானது!
Thursday, December 6th, 2018
இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய சமபோச வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
நாவாந்துறை சென்.நீக்கிலஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து மணற்காடு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை அணி மோதியது.
நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல்கள் எதையும் பதிவு செய்யாததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றிiயைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 3:2 என்ற கோல் கணக்கில் சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது
Related posts:
23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்!
இந்திய வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருட தடை!
உலகக் கிண்ண கிரிக்கெற்: இங்கிலாந்து அணி 64 ஓட்டங்களால் தோல்வி!
|
|
|


