தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை புறக்கணித்த அவுஸ்திரேலியா!

Friday, July 7th, 2017

சம்பள விவகாரம் இன்னும் தீர்க்கப்படாததால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை புறக்கணிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது.புதிய ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கிய போதும், வீரர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவுஸ்திரேலியா ஏ அணி விளையாடவிருந்த போட்டிகளும் ரத்தான நிலையில், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வேலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதற்கிடையே அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், புதிய ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் காணப்படாததால் அவுஸ்திரேலிய ஏ வீரர்கள் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.  வேலையில்லாத வீரர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டே இம் முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் இரத்தான நிலையில், வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களும், ஆஷஸ் தொடரும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related posts: