டெஸ்ட் : முதல் 10 வீரர்களுள் திமுத்!

Tuesday, August 20th, 2019

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஷ் கிண்ண தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன முதல் 10 வீரர்களுள் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி 922 புள்ளிகளுடன் குறித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 92 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் 913 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன், 887 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

Related posts: