உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் 9 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி!

Saturday, July 8th, 2023

உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் இடம்பெற்ற, 9 போட்டிகளிலும், இலங்கை அணி, வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

குழுநிலையில் இடம்பெற்ற 4 போட்டிகளிலும், சுப்பர் சிக்ஸ் சுற்றில் இடம்பெற்ற 5 போட்டிகளிலும், இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி 8 விக்கட்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.1 ஓவர்களில், சகல விக்கட்டுக்களையும் இழந்து, 243 ஓட்டங்களை பெற்றது.

பின்னர், 244 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 44.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில், இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

இந்த நிலையில், உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, நாளையதினம் இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: