தென்னாபிரிக்க வீரர் ரபாடாவுக்கு போட்டி ஊதியத்தில் 15 % அபராதம்!

Saturday, February 17th, 2018

இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் விதி மீறிய காரணத்தால் தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இந்தியா -− தென் ஆபிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற தென்ஆபிரிக்கா அணி தலைவர் மார்கிராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ஒட்டகள் சேர்த்தது. தென் ஆபிரிக்கா சார்பில் நிகிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

தென்ஆபிரிக்கா அணி சார்பில் ஹாசிம் அம்லா 71 ஒட்டங்கள் எடுத்து ரன் அவுட்டானார். மற்றவர்கள் விளையாடாததால் அந்த அணி 201 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து, இந்திய அணி 73 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இப் போட்டியில் ரபாடா வீசிய பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அப்போது, அதனை கொண்டாடும் வகையில் தவானை வம்பிழுக்கும் வண்ணம் ரபாடா நடந்து கொண்டதாக தெரிகிறது.

இது விதிமுறைகளை மீறியது இதனால், தென் ஆபிரிக்க வீரர் ரபாடாவுக்கு நேற்றைய போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: