துடுப்பாட்ட மட்டைகளின் அளவு தொடர்பில் தர நிர்ணயம் வேண்டும் – பொன்டிங்!

Tuesday, July 5th, 2016

துடுப்பாட்ட மட்டைகளின் அளவு தொடர்பில் தர நிர்ணயம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்பாட்ட மட்டைகளின் அளவு மற்றும் நிறை என்பன தொடர்பில் தர நிர்ணயம் அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறு வரையறைகளை விதிப்பதன் மூலம் பந்திற்கும் மட்டைக்கும் இடையிலான சமநிலையைப் பேண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கிரிக்கட் சட்டங்களில் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் மட்டையின் நிறை மற்றும் மட்டையின் தடிப்பம் பற்றி குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிர்ணயிப்பதன் மூலம் போட்டியின் சமநிலையை பேண முடியும் என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

bat_banner

Related posts: