உலக கிண்ண கிறிக்கெற் தொடர் – முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நாளையதினம் பலப்பரீட்சை!

Tuesday, November 14th, 2023

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண லீக் ஆட்டங்கள் முடிவடைந்து நொக் அவுட் வாரத்திற்குள் நுழைகிறோம்.

இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நாளையும் நாளைமறுதினமும் இடம்பெற உள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா அணி நியூசிலாந்தை நாளையதினம் முதல் அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

நாளை மறுதினம் இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான அவுஸ்ரேலியாவை தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது.

உலகக் கிண்ண தொடரில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகள் மற்றும் ஐ.சி.சி புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறும். அதன் பிரகாரம்,

இந்தியா தென்னாப்பிரிக்கா அவுஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

நவம்பர் 11 ஆம் திகதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து கடைசியாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்தது.

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முதன்மையாக ஆப்கானிஸ்தான் அணி தெரிவாகியுள்ளது. இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்துவரும் படுமோசமான தோல்விகள் காரணமாக சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி இம்முறை தகுதி பெறவில்லை.

மூன்று உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை தோற்கடித்தன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி. புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ணம் கடைசியாக 2017 இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: