தரவரிசையில் 540-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறிய வீரர்!

Monday, November 7th, 2016

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தரவரிசை பட்டியலில் 540-வது இடத்தில் இருந்து கடின உழைப்பால் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார்.

ஆன்டி முர்ரேவின் டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக உலகின் முதல் நிலை வீரராக முடி சூடியுள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் போட்டியில் கோப்பையை கைப்பற்றியதன் வாயிலாக முர்ரே முதன் முறையாக தரவரிசையில் முதலிடத்தில் வந்துள்ளார்.

டென்னிஸ் வீரர்களுக்கு தரவரிசை வழங்கத் துவங்கியது முதல் இதுவரை 25 வீரர்கள் முதல் நிலைக்கு வந்துள்ளனர். முர்ரே 26-வது வீரராக அந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு முர்ரே டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 540-வது இடத்தில் இருந்தார். தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வெற்றி தோல்விகளை கடந்து பயணித்த முர்ரே 2013 ஆம் ஆண்டு 4-வது இடத்திற்கு முன்னேறினார்.

2015-ஆம் ஆண்டு 2-வது இடத்திற்கு முன்னேறிய முர்ரே சனிக்கிழமை நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் டென்னிஸ் போட்டியில் கோப்பயை கைப்பற்றியதுடன் முதல் இடத்திற்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட 13 ஆண்டு கால கடின உழைப்பு முர்ரேவுக்கு இந்த சிறப்பு வெகுமதியை வழங்கியுள்ளது. தரவரிசை என்பது நிரந்தரம் இல்லை என்றாலும், தொடர்ந்து முர்ரேவின் உழைப்பும் அவர் வெற்றிபெறும் கோப்பைகளும் அந்த இடத்தை தக்க வைக்க உதவும் என்றே ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90-5-300x180

Related posts: