தடைப்பட்ட கால்பந்து போட்டி!

Wednesday, November 8th, 2017

பிரான்ஸில் நடந்த கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவரின் செயலால் கோபமடைந்த உள்ளூர் ரசிகர்கள், மைதானத்திற்கு நுழைந்ததால் போட்டி தடைபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

பிரான்ஸ் St Etienne மற்றும் Lyon ஆகிய கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது Lyon அணியை சேர்ந்த நபில் பெகீர், ஐந்தாவது கோல் அடித்த மகிழ்ச்சியில் தனது மேல் சட்டையை கழற்றி,  St Etienne அணியின் உள்ளூர் ரசிகர்களின் முன்பு தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் களத்திற்குள் புகுந்தனர். ரசிகர்கள் இடையே சண்டை தொடங்கும் அபாயம் ஏற்பட இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகளும் மைதான களத்திற்குள் நுழைந்தனர்.வீரர்களை பாதுகாக்கவும், ரசிகர்களை வெளியேற்றவும் பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர் புகைகுண்டுகளை வெடிக்க செய்தனர்.இதனால் களத்திலிருந்து வெளியேறிய ரசிகர்கள், தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு அருகேயே நின்று கொண்டு எரியும் வகையிலான புகை குண்டுகளை பற்ற வைத்தனர்.இதனால் மைதானமே புகை மண்டலமாக காட்சியளித்தது. ரசிகர்களை களத்திலிருந்து அப்புறப்படுத்திய பின்னர், 30 நிமிடங்கள் தாமதமாக மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

Related posts: