தடகளத்தில் நல்லூர் இளைஞர் கழகம் சம்பியனானது!

Tuesday, July 17th, 2018

யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான 30 ஆவது தடகளத் தொடரில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தத் தொடர் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 52 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது நல்லூர். தெல்லிப்பழை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 38 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 34 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் கரவெட்டி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 24 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 23 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றன.

Related posts: