டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.
ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் மாற்றுவலுவுள்ளோருக்காக நடத்தப்படும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோஹ்லியை கிண்டல் செய்தது தவறு -கிளார்க்!
இந்திய அணி தோற்றது நன்மையே - டிராவிட்!
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் - எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் ...
|
|