டெஸ்ட் போட்டி வரலாற்றில் நான்கு நாள் போட்டி ஒரு பார்வை!

Thursday, December 28th, 2017

தென்னாபிரிக்கா சிம்பாப்வே அணிகள் மோதும் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்றைய நாளில் போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியானது கிரிக்கெட் வரலாற்றில் உத்தியோகபூர்வமாக நடத்தப்படும் முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றுவருகின்றது. தென்னாபிரிக்க மண்ணில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் அமைந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகள் ஒருநாளில் வழக்கமாக 6 மணித்தியாலங்கள் ஆடப்படும். ஆனால் இந்த 4 நாள் டெஸ்ட் போட்டியானது ஆறாரை மணித்தியாலங்கள் மற்றும் 98 ஓவர்களாக விளையாடப்படுகின்றது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணிசார்பில் அணித்தலைவர் டு பிளசிஸ் முதுகுவலி உபாதை காரணமாக விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியின் தலைவராக டி வில்லியர்ஸ் செயற்படவுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைனும் விளையாடவில்லை வைரஸ் தொற்று காரணமாக இவர் இணைக்கப்படவில்லை.

அத்துடன் சிம்பாப்வே அணியை கிரீமர் வழிநடத்துகின்றார், சிம்பாவே சார்பாக அறிமுக வேகப்பந்துவீச்சாளரான முசரபனி,இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியை அவர்களது சொந்த மண்ணில் சிம்பாப்வே அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்,

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டிவில்லியஸ், துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார், இதனடிப்படையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மக்கிரம் இளைய வீரராக 18 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தார், 125 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொடுத்தார், நீண்ட இடைவெளிக்குபின் இணைந்த டிவில்லியஸ் தனது பாணியில் 53 ஓட்டங்களையும், பவுமா 44 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொடுத்தார்கள். பந்துவீச்சில் ஜர்விஸ் மவ்பு ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களைக்கைப்பற்றினார்கள், 309ற்கு 9 என்ற நிலையில் தென்னாபிரிக்கா அணி ஆட்டத்தை இடைநிறுத்தி சிம்பாவேக்கு துடுப்பெடுத்தாட பணித்தது, இதாடிப்படையில் 30 ஓட்டங்களுக்கு வேகமாக 4 விக்கட்டுக்களை இழந்தநிலையில் சிம்பாவே அணி காணப்படுகின்றது. ஆட்டமிழக்காது பர்ல் 15 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஸ்டெயினுக்காக இணக்கப்பட்ட மோர்க்கல் 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

வெற்றி தோல்வியற்ற முடிவை எதிர்பார்த்து ஆரம்பமான போட்டி முடிவை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

Related posts: