டெஸ்ட் போட்டிளில் இலங்கை அணிக்கு எந்த இடம்!
Wednesday, November 15th, 2017
கிரிக்கெட் போட்டி 1877-ஆம் ஆண்டில் இருந்து விளையாடப்பட்டு வருகிறது. முதல் நாட்கள் கணக்கில் இன்றி விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டி, அதன் பின் பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டு, 5 நாட்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
தற்போது அதுவும் நான்கு நாட்கள் நடத்துவதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு 12 அணிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் கொண்ட முதல் பத்து அணிகளை பற்றி பார்ப்போமா?
பத்தாவது இடம்.
இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேச அணி வெறும் 10 டெஸ்ட் போட்டிகளில் தான் வென்றுள்ளது.அதிகபட்சமாக 79 தோல்விகளை சந்தித்து 15 போட்டிகளை டிரா செய்துள்ளது. வங்கதேச அணிக்கு கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு அங்கிகாரம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒன்பதாவது இடம்.104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே 11 வெற்றிகள், 66 தோல்விகள் மற்றும் 27 போட்டிகள் என டிரா செய்துள்ளது. இந்த அணிக்கு 1992-ஆம் ஆண்டில் இருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் வழங்கப்பட்டது.
எட்டாவது இடம்.இந்த இடத்தை இலங்கை அணி தான் பிடித்துள்ளது. 35 வருடங்களாக விளையாடி வரும் இலங்கை அணி 264 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 வெற்றிகள், 99 தோல்விகள் மற்றும் 81 போட்டிகளில் டிரா செய்துள்ளது.
ஏழாவது இடம்.தற்போது வரை 422 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள நியூசிலாந்து அணியே ஏழாவது இடத்தை பிடிக்கிறது. 422 போட்டிகளில் 170 தோல்விகளை சந்தித்து 163 போட்டிகளில் 89 வெற்றிகளை குவித்து, 163 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1930-ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஆறாவது இடம்.இந்தியா-பாகிஸ்தான் என பிரிந்த பின்பு 1952-ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும், பாகிஸ்தான் அணி, 412 டெஸ்ட் போட்டிகளில் 132 வெற்றிகள், 122 தோல்விகள் மற்றும் 158 போட்டிகளை டிரா செய்துள்ளது.
ஐந்தாவது இடம்.மொத்தம் 515 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 1932-ஆம் ஆண்டில் இருந்த் விளையாடி வருகிறது. இதில் 142 போட்டிகளில் வெற்றியும், 158 போட்டிகளில் தோல்வியும், 214 போட்டிளை டிராவையும், 1 போட்டி டையாகவும் முடிந்துள்ளது.
நான்காவது இடம்.டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்குப் பிறகு டெஸ்ட் ஆடிய மூன்றாவது அணி தென்னாப்பிரிக்க அணி தான்,417 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 155 போட்டிகளை வென்றுள்ளது. அதே போல்,138 போட்டிகளில் தோல்வியும்,124 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது.
மூன்றாவது இடம் 9932 முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் மேற்கிந்திய தீவு அணி, தற்போது டெஸ்ட் போட்டிகளில் சற்று சோபிக்கத் தவறினாலும், 1980 மற்றும் 1999-0களில் ஒரு அசுரத்தனமான டெஸ்ட் அணி, 528 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணி 168 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 185 போட்டிகளில் தோல்வியும், 174 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது.
இரண்டாவது இடம்.கிரிக்கெட்டை கண்டுபிடித்து, விதிகளை எழுதி இன்று வரை தரமாக விளையாடி டெஸ்ட் போட்டியை பாதுகாத்து வருகிறது இங்கிலாந்து அணி, இதுவரை 990 டெஸ்ட் போட்டிகளை விளையாடி 1000 டெஸ்ட் போட்டிகளை விளையாடும் முதல் அணியாக இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைக்க உள்ளது.இந்நிலையில், 900 போட்டிகளில், 356 வெற்றி, 291 தோல்வி, 343 டிரா என டெஸ்ட் போடிகளுக்கான அணிகளின் அதிக வெற்றிகள் குவித்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவுஸ்திரேலியா அணி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 803 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 378 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியையும், 216 போட்டிகளில் மட்டும் தோல்வியையும் 207 போட்டிளை டிராவும் செய்துள்ளது
Related posts:
|
|
|


