டெஸ்ட் போட்டியில் முதல் பிடி எடுக்க 7 ஆண்டுகள் காத்திருந்த மொஹமட் அமீர்!

Wednesday, November 2nd, 2016

டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது பிடியெடுப்பை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார் பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பிராவோவின் பிடியை எடுத்ததன் ஊடாக அமீர் இச்சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியின் போது பிடியெடுப்பு என்பது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருக்க இந்த பிடியெடுப்பு ஏன் பேசப்படுகின்றது என்றால் இது மொஹமர் அமீரின் 7 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்த முதலாவது பிடி. இந்தப் பிடியை எடுப்பதற்காக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் 7 ஆண்டுகள் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அமீர், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் டர்ரன் பிராவோவின் பிடியை அபாரமனான முறையில் நிகழ்த்தினார்.இது 20ஆவது டெஸ்ட் போட்டியில்தான் ஆமிரால் தனது முதல் டெஸ்ட் பிடியை நிகழ்த்த முடிந்தமை ஒரு உலக சாதனையாகப் பதியப்பட்டுள்ளது.

colreceived_10210883182385128-696x425-720x480145736221_4963975_01112016_aff_cmy (1)

Related posts: