காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது – தென்னாபிரிக்கா!

Tuesday, March 14th, 2017

காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டர்பன் நகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், 2022 ஆம் ஆண்டு அங்கு போட்டிகளை நடத்த முடியாது என்று தென்னாபிரிக் தெரிவித்துள்ளது.

செலவினங்கள் அதிகரித்து வருவதால் டர்பனுக்கான நிதியுதவியை நீக்குவதாக தென்னாப்பிரிக்க அரசு கூறியதை அடுத்து, போட்டிகளை நட்த்துவதில் இருந்து டர்பன் விலகுவதை, தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ஜிடோன் சாம் உறுதிப்படுத்தினார்.

போட்டிகளை நடத்துவதற்கான மாற்று இடங்களை தேர்ந்தெடுப்பதற்காக காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு லண்டனில் கூடுகிறது. போட்டிகளை நடத்துவதில் இருந்து டர்பன் விலகிவிட்டால், போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக ஏற்கனவே லிவர்பூல் கூறியிருக்கிறது

Related posts: