டீக்கடையில் இருந்து பெண் சூப்பர் ஸ்டார்

Wednesday, July 5th, 2017

மகளிர் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் ஏக்தா பிஸ்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதினை தட்டிச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சுழல்பந்துவீச்சாளர், ஏக்தா பிஸ்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தற்போது இவர் தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார். இவரின் அப்பா உத்தரகாண்டில் டீக்கடை வைத்து நடத்தி வந்தவர்.இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது ஊரில் டீக்கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் குந்தன் சிங் பிஸ்ட்.

தனது மகள் ஏக்தாவுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிக இருந்த காரணத்தால், அவளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கும் ஏக்தாவின் அப்பா, தேநீர் கடை நடத்தியவர் உத்தரகண்டில்.

2011-ல் தேசிய அணியில் இடம் பிடித்தாள். இப்போது சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறாள் என்று சந்தோஷம் கொள்கிறார் ஏக்தாவின் தந்தை.மேலும் தாயார் கூறுகையில், சிறு வயதில் இருந்தே ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவாள், அதிக ஆண்களுக்கு மத்தியில் இவள் மட்டும் பெண்ணாக இருப்பதால் இதனை வேடிக்கை பார்க்க நிறைய பேர் வந்து வேடிக்கை பார்ப்பார்கள்.உத்தரகாண்ட் மாநில அணியில் விளையாட ஆரம்பித்த பின், எங்கள் வருமானம் அதிகரித்தது. என் கணவருக்கு பென்சனும் அதிகமானதால் டீக்கடையை விட்டுவிட்டோம் என கூறியுள்ளார்

Related posts: