டி கொக்கின் மேன்முறையீடு நிராகிரிப்பு !

Friday, March 9th, 2018

தென்னாப்பிரிக்க கிரிக்கட் வீரர் குயின்டன் டி கொக்கின் மேன்முறையீட்டை சர்வதேச கிரிக்கட் பேரவையின், கிரிக்கட் நடுவர் நிராகரித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டேர்பன் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையில் இடம்பெற்ற முறுகல் நிலை ஒன்று தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அவரது குற்றம் 1ம் எல்லைக்குள் தரப்படுத்தப்பட்டு, ஒரு தண்டப்புள்ளியும் வழங்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை டி கொக் நிராகரிக்காவிட்டாலும், அதற்காக வழங்கப்பட்ட தண்டனையை குறைத்துக் கொள்ளும் நோக்கில் மேன்முறையீட்டை செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு நேற்று மாலை விசாரணைக்கு வந்த போதும், அவருக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத அபராதத்தையும், ஒரு தண்டப்புள்ளியையும் மாற்றிக் கொள்ள முடியாது என்று போட்டி நடுவர் ஜெஃப் க்ரோ அறிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னருக்கு போட்டிப் பணத்தில் 75 சதவீத அபராதமும், அவரது குற்றம் 2ம் எல்லைக்குள் தரப்படுத்தப்பட்டு 3 தண்டப்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: