டாக்டர் பட்டத்தை நிராகரித்த டிராவிட்!

Monday, January 30th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார்.

தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார்.

இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் திகதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ராகுல் டிராவிட்டை கவுரவிக்க விரும்பிய பெங்களூரு பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க விரும்பியது.

தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை தான் பணிவுடன் மறுப்பதாக டிராவிட் தெரிவித்துள்ளதாக பெங்களூரு பல்கலைக்கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

தனது அபார ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளார். இதனால் இந்திய அணியின் ‘தடுப்புச்சுவர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.

1996-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான டிராவிட், கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 19 வயதுக்குற்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

download

Related posts: