ரியோ ஒலிம்பிக்கில் அணியை நிர்வகிக்க தவறிய கென்ய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!

Tuesday, August 30th, 2016

கென்யாவின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் துணை தலைவர் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கென்ய அணியை சரியாக நிர்வகிக்க தவறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளார்.

ஒலிம்பிக் தூது குழுவின் தலைவரான மற்றொரு மூத்த அதிகாரி மருத்துவ காரணங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்டார். திருட்டு, அலுவலக துஷ்பிரயோகம் மற்றும் கடமையை புறக்கணித்தல் ஆகிய பிரிவுகளில் சந்தேக நபர்களை விசாரித்து வருவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

கென்ய விளையாட்டு வீர்ர்கள், போட்டிகள் முடிந்து பிறகு மோசமான ஒரு அண்டைப் பகுதியில் தாங்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் அங்கு இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Related posts: