டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டி!

நாட்டின் முக்கிய உதைபந்தாட்ட போட்டியின் டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம், டயலொக் ஆஸியாட்டா நிறுவனத்துடன் இணைந்து 13வது முறையாகவும் இந்தப் போட்டி ஏற்பாடாகியுள்ளது.
நாட்டின் முன்னணி 18 உதைபந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. 153 போட்டிகள் இதில் இடம்பெறவுள்ளன.
முதலாவது போட்டி நியு யங்ஸ் மற்றும் பேருவளை சுப்பர் சன் ஆகியன மோதவுள்ளன. டயலொக் சம்பியன் லீக் 2018ல் தற்போதைய சம்பியன் கொலொம்போ எப்.சி. றினோன் விளையாட்டுக் கழகம், சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், நியு யங்ஸ் விளையாட்டுக் கழகம், புளுஸ்டார் விளையாட்டுக் கழகம், சுப்பர் சன் விளையாட்டுக் கழகம், ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், பெலிக்கன்ஸ் விளையாட்டுக் கழகம், இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம், இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் உள்ளிட்ட முக்கிய அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. இறுதிப் போட்டி ஜனவரி மாதம் 27ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
Related posts:
|
|