20 ஆயிரம் டொலர்களை நன்கொடை வழங்கிய அப்ரிடி!

Tuesday, June 5th, 2018

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ~hகித் அப்ரிடி மேற்கிந்திய தீவுகளில் புயலால் பாதிக்கப்பட்ட மைதானங்களை பராமரிக்க 20 ஆயிரம் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் ~hகித் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில் தனது கடைசி சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடினார்.

மேற்கிந்திய தீவுகளில் புயல் பாதிப்பினால் பல மைதானங்கள் சேதமடைந்தன. அவற்றைப் புதுப்பிப்பதற்கு நிதி திரட்டும் வகையில் உலக லெவன் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே டி20 போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டது.

ஐ.சி.சி. யையும் இந்தப் போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து அளித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் உலக லெவன் அணியை வீழ்த்தியது.

உலக லெவன் அணிக்கு ~hகித் அப்ரிடி தலைமை தாங்கியிருந்தார்;. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மைதானங்களைப் புதுப்பிப்பதற்காக அவர் 20,000 அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கினார்.

அப்ரிடியின் இந்த செயலை அனைவரும் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

கிரிக்கெட் நிவாரண நிதிக்காக இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய ஐ.சி.சி க்கு நன்றி. இது உண்மையிலேயே எனக்கு ஒரு கௌரவம் மற்றும் என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது.

எனது அறக்கட்டளையின் சார்பில் 20,000 அமெரிக்க டொலர்களை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: