சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ!

Friday, July 8th, 2016

ஐரோப்பிய கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்திருந்த மிச்செல் பிளாட்டினியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர் பிரான்ஸின் மிச்செல் பிளாட்டினி. 1984ஆம் ஆண்டு ஐரோப்பிய போட்டியில் அவர் 9 கோல் அடித்து இருந்தார்.

அவரது சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். ரொனால்டோ புதனன்று நடந்த வேல்ஸ் அணிக்கு எதிராக அடித்த ஒரு கோலையும் சேர்த்து ஐரோப்பிய போட்டியில் 9 கோல் அடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு 2 கோலும், 2008இல் ஒரு கோலும், 2012இல் 3 கோலும், 2016இல் இதுவரை 3 கோலும் அடித்துள்ளார். இறுதிப் போட்டியில் மேலும் ஒரு கோல் அடித்தால் பிளாட்டினி சாதனையை முறியடிப்பார். இதுவரை பல்வேறு சாதனைகளை முறியடித்திருப்பதாக கூறியுள்ள ரொனால்டோ, தனது சாதனை தொடரும் என்றும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதாகவும் கூறியுள்ளார்.

Related posts: