ஜ.பி.எல்.கிரிகெட் கட்டணம் ரூ.1300 அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Tuesday, April 3rd, 2018

சேப்பாக்கம் மைதானத்தில் ஜ.பி.எல்.கிரிக்கட்போட்டிக்கான குறைந்த பட்ச டிக்கட் விலை இந்திய ரூபா மதிப்பில் ஆயிரத்தது 300 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

11 ஆவது ஜ.பி.எல் 20 ஓவர் கிரிகட் போட்டி வருகின்ற 7 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கின்றது .சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜ.பி.எல் போட்டியில் விளையாடுகின்றது சூதாட்டப் பிரச்சினைக்கு காரணமாக அந்த அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன ஜ.பி.எல் போட்டியில் சென்னை சேப் பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 லீக் ஆட்டம் நடக்கின்றது முதல் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 10 ஆம் திகதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சந்திக்கவுள்ளது இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது இந்தப் போட்டிக்கான ரிக்கட் விற்பனை இன்றுஆரம்பமாகின்றது

ஒருவருக்கு 2 டிக்கட்டுக்களுக்கு மேல் வழங்கப் பட மாட்டாது குறைந்த பட்ச விலை ஆயிரத்து 300 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது  சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த பட்ச ரிக்கட் விலை ஆயிரத்து 300ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Related posts: