ஜோன்சனின் சாதனை முறியடித்த ஜடேஜா!
Monday, August 7th, 2017
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய உலக சாதனையொன்றை இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிலைநாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் பதிவுசெய்தார்.
இதற்கு முன்னர் அவுஸ்ரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜோன்சன் 34 போட்டிகளில் 150 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது அதனை தற்போது ஜடேஜா 32 டெஸ்ட் போட்டிகளில் எட்டி முறியடித்துள்ளார்.
Related posts:
பளு தூக்குதல் தடைக்கெதிராக ரஷ்யா மேன்முறையீடு!
இலங்கை அணிக்கு பாதிப்பாக அமையும் - சங்ககாரா !
பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை: ஜாம்பவான் ஜெயசூர்யா குமுறல்!
|
|
|


