இலங்கை அணிக்கு பாதிப்பாக அமையும் – சங்ககாரா !

Saturday, July 15th, 2017

இலங்கை அணிக்கு பாதிப்பாக அமைவது குறித்து முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி சங்ககாரா அளித்த பேட்டியில், தடுமாறுவது தான் பாதிப்பாக அமைகிறது. வீரர்கள் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வீரர்கள் திறமையில் குறைவான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஜிம்பாப்வே அணியிடம் நாம் தோற்றது துரதிஷ்டவசமானது. எனினும் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். தரங்க அணியில் இணைந்திருப்பது அதிர்ஷ்டமானது. இந்தியாவுடனான தொடர் கடினமானதாக இருக்கும். தியாகம், நல்ல திட்டம் மற்றும் தோல்வியில் தடுமாறாமல் இருப்பது போன்ற விடயங்களுடன் நீண்ட கால வெற்றிக்கு உழைக்க வேண்டும் என சங்ககாரா வலியுறுத்தியுள்ளார்.

Related posts: