பளு தூக்குதல் தடைக்கெதிராக ரஷ்யா மேன்முறையீடு!

Wednesday, August 3rd, 2016

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்ய பளு தூக்குதல் அணிக்கு காணப்படும் தடைக்கெதிராக ரஷ்ய பளு தூக்குதல் சம்மேளனம் மேன்முறையீடு  செய்யவுள்ளது.

அரச ஆதரவுடன் ரஷ்யாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊக்கமருந்து பாவனையயையடுத்து, றியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யர்கள் பங்கேற்பது குறித்து, ரஷ்யாவின் அந்தந்த விளையாட்டு சம்மேளனங்களே முடிவு செய்ய வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, அரச ஆதரவுடன் ஊக்க மருந்துப் பாவனை இடம்பெற்றதாக அறிக்கையொன்று வெளியானமையையடுத்து, ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவுக்குள் ரஷ்யர்கள் எட்டுப் பேர் நுழைவதற்கு சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் கடந்த வாரம் தடை விதித்திருந்து. இந்நிலையிலேயே, ரஷ்ய பளுதூக்கல் சம்மேளனத்தின் மேன்முறையீடானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு, விளையாட்டுக்கான தீர்ப்பாயத்துக்கு செல்லவுள்ளது.

பலமான எட்டுப் பேரைக் கொண்ட அணியில், முன்னையை ஊக்க மருந்து மீறல்கள் காரணமாக ஏற்கெனவே இருவர் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ஊக்க மருந்து பிரச்சினை தொடர்பான டொக்டர் றிச்சர்ட் மக்கிலரேன்னின் அறிக்கையில் நால்வர் பெயரிடப்பட்டிருந்தனர்.

அனைத்து ரஷ்ய தடகள வீரர்களும் றியோ 2016 ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட வேண்டும் என உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை பரிந்துரைத்த நிலையில், பளு தூக்கும், தடகள விளையாட்டுக்களுக்கு மட்டுமே ரஷ்யாவிலிருந்தான அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related posts: