சௌத்கேட் இங்கிலாந்து முகாமையாளராக்கப்பட வேண்டும் – வெய்ன் ரூனி!
Tuesday, November 15th, 2016
இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் தற்காலிக முகாமையாளர் கரித் சௌத்கேட்டுக்கு நிரந்தரமாக, இங்கிலாந்து முகாமையாளர் பதவி வழங்கப்படவேண்டும் என இங்கிலாந்து அணியின் தலைவர் வெய்ன் ரூனி தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து அணியுடன் கடந்த வெள்ளிக்கிழமை (11), வெம்ப்ளியில் இடம்பெற்ற உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம், தான் பொறுப்பேற்ற மூன்று போட்டிகளில், இரண்டாவது வெற்றியை சௌத்கேட் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே, தன்னால் முடிந்த அனைத்தையும் சௌத்கேட் செய்திருப்பதாகவும், நிரந்தர முகாமையாளருக்கான போட்டியில் சௌத்கேட் முன்னிலையில் இருப்பதாக வெய்ன் ரூனி தெரிவித்துள்ளார்.

Related posts:
2024இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த 2,360 கோடி செலவிட தயார்-பிரான்ஸ்!
அயர்லாந்தை புரட்டி எடுத்தது அவுஸ்திரேலியா!
தற்பரன் வெற்றிக்கிண்ணம் ஞானவைரவர் அணிவசம்!
|
|
|


