சேற்றுநில ஒலிம்பிக் போட்டியில் 4000 வீரர்கள் பங்கேற்பு!

Saturday, July 28th, 2018

ஜேர்மனியின் பிரன்ஸ்பியெட்டலில் உள்ள எல்ப் ஆற்றின் அருகில் 13ஆவது சேற்றுநில ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக இடம்பெற்றன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளில் உலகெங்கிலுமிருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் ஜேர்மனியிலிருந்து 40 அணிகளும் ஏனையநாடுகளின் அணிகளும் பங்குபற்றின.

இவ்வருடத்திற்கான சேற்றுநில ஒலிம்பிக்கில் கரப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் மற்றும் படகு சவாரி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இவற்றில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் மிகச்சிறந்த வேடிக்கையான பெயர் சூட்டிய அணிக்கு சிறந்த பெயருக்கான பரிசு, சிறந்த சின்னத்துக்கான பரிசு மற்றும் சிறந்த சீருடைக்கான பரிசு என பல பரிசுகள் வழங்கப்பட்டன.

“ஒரு நல்ல காரணத்திற்காக அழுக்கு விளையாட்டு” என்ற குறிக்கோளைக் கொண்ட இவ்வாறான சேற்றுநில ஒலிம்பிக் போட்டிகள் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் விதத்திலேயே கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வருட போட்டிகளின் மூலம் 55 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சுத்தமான சேற்று நிலங்களில் இரத்தத்தினை குளிர்விக்கும் இப்போட்டிகள் தற்போது பலராலும் விரும்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: