சுரங்க லக்மால் மீண்டும் விளையாடுவதில் சந்தேகம்!
Tuesday, December 12th, 2017
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மீண்டும் சுகயீனமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியுடன் டெல்லியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காற்று மாசால் சுரங்க லக்மால் சுகயீனமுற்றிருந்தார்.இந்நிலையில் அவர் பூரணமாக குணமடையாத நிலையில் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
விளையாட முடியுமாக இருந்தால் மாத்திரமே போட்டியில் கலந்து கொள்ளுமாறு ஏனைய வீரர்கள் அவர்களிடம் கோரியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்க லக்மால் 10 ஓவர்களை வீசி 13 ஓட்டங்களுக்கு மாத்திரமே கொடுத்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவாகியுள்ள நிலையில் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் மீண்டும் சுகயீனமுற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|
|


