சுப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வென்றது இலங்கை அணி!

ஒக்லாண்டில் இன்று (02) இடம்பெற்ற சுற்றுலா இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றது.
196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 196 பெற்றது.
அதன்படி, போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை பெற்றது. இந்த ஓவரில் பந்துவீசிய மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
9 ஓட்டங்கள் என்ற வெற்றி இழக்கை நோக்கி துடுப்பாட இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்க ஆகியோர் களமிறங்கினர்.
இந்தநிலையில், இலங்கை அணி 3 பந்துகளில் ஓட்ட இலக்கை அடைந்து, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|