சிறுவர்களை போல செயற்படுகின்றனர் – இலங்கை வீரர்களை கடுமையாக விமர்சிக்கின்றார் தில்ஷன்!

Thursday, June 6th, 2019

இலங்கை அணியின் நடுவரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தின் போது சிறுவர்களை போல விளையாடுகிறார்கள் என ஜாம்பவான் தில்ஷன் விமர்சித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இலங்கை அணியின் நடுவரிசை வீரர்களின் பேட்டிங் மோசமாக இருந்தது.

இது தொடர்பாக பேசிய இலங்கை அணியின் ஜாம்பவான் தில்ஷன், நடுவரிசை வீரர்கள் இந்தமுறையும் பொறுப்புடன் விளையாடவில்லை. சில சமயங்களில், சிறுவர்கள் போல நடுவரிசை வீரர்கள் நடந்துகொள்கிறார்கள். பேட்டிங் செய்கிறபோது அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.

குசல் பெரேரா எப்படி எளிதாக ஆடினார் என்பதை பார்த்தோம். இயல்பாக விளையாடி, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் அளித்தார். உதானா மோசமான ஷாட்டால் ஆட்டமிழந்தார். அவர் குசலுக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும்.

140/1 என இருந்த ஸ்கோர் 180/8 என மாறியதை நம்பமுடியவில்லை, இந்த சரிவைச் சந்தித்ததற்கு நான் நடுவரிசை வீரர்களைத்தான் குறை கூறுவேன் என கூறியுள்ளார்.

Related posts: