சாலை விபத்தில் சிக்கிய முகமது ஷமி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் ஷமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாகவே முகமது ஷமி மீது அவரது மனைவி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளால் அவரைப் பற்றி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவாறு இருந்தன.
இந்நிலையில் டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் பயணம் செய்த போது அவரது கார் எதிர்பாரா விதமாக விபத்தில் சிக்கியது.
தலையில் காயம் அடைந்த ஷமிக்கு சிக்கிச்சை அளிக்கப்பட்டு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் உள்ளார்.
விசாரித்த பிசிசிஐ., ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்தது. ஷமி மீது அவரது மனைவி சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரித்த பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என சமீபத்தில் உறுதி செய்ததது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|