சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா அனித்தா!
Friday, September 30th, 2016
ஜெகதீஸ்வரன் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசியமட்ட சாதனையை தகர்த்தெறிந்தார்.இப்போட்டியில் இன்று(30.) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசியமட்ட சாதனையை தகர்த்தெறிந்தார்.
அண்மையில் நடைபெற்ற படைவீரர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இராணுவ வீராங்கனையான கசிந்தா நிலுக்ஷி 3.40 மீற்றர் உயரத்தை தாண்டி நிலைநாட்டிய சாதனையையே அனித்தா முறியடித்தார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற சேர் ஜோன் காபற் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் அனித்தாவினால் தேசியமட்டத்தில் 3.35 மீற்றர் என நிலைநாட்டப்பட்ட சாதனையையே குறித்த இராணுவ வீராங்கனை 3.40 மீற்றர் என சாதனை படைத்தார் என்பதும் அதனை அனித்தா மீண்டும் இப்போட்டியில் 3.45 மீற்றர் என முறியடித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Related posts:
ஷெகன் ஜெயசூரியாவின் சதம் வீண்! தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!
ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட்டை இழப்பேன்-டிவில்லியர்ஸ் உறுதி!
கிண்ணத்தை வென்றது ஆவரங்கால் மத்தி!
|
|
|


