சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து தர்ஜினி சிவலிங்கம் ஓய்வு..!

இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தெரிவிக்கையில்,
”இலங்கை வலைப்பந்தாட்டத்திற்கு நான் பல வருடங்களாக பங்களித்துள்ளேன். இப்போது எனக்கு 45 வயதாகி விட்டது. ஆசியாவில் எந்தப் பெண் வீராங்கனையும் நான் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் ஈடுபட்ட அளவிற்கு ஈடுபட்டிருக்கவில்லை.
2023 உலக வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளின் பின் ஓய்வு பெற நான் தீர்மானித்துள்ளேன்” என உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விராட் கோஹ்லி என்ன கடவுளா?
ஒருநாள் தலைமையிலிருந்து தரங்க நீக்கம்..?
இலங்கை, பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இரத்து!
|
|